மே மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

மே மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

சொல்லிலும், செயலிலும் வல்லமை பெற்ற ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து பார்வையிடும் இடம் சிறப்பாக அமையும். உங்களில் தொழில் சார்ந்த பிரச்சனைகளில் விடுதலை பெறுவீர்கள். கொடுத்த இடத்திலிருந்து விரைவில் பணம் வந்து சேரும். குறைந்த பட்ச முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். 
 
எதிலும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். எதை செய்தாலும் அதற்கு ஒரு காரணமும் அதில் நியாயமும் இருக்கும்படி பார்த்து கொள்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றாலும்... சிறு விடயத்தைச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு எந்த தடை வந்தாலும் உங்களின் செயல்பாடுகள் மூலம் எதையும் செயல்படுத்தி வருவீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில் புதிதாக கற்றுக் கொள்ள ஆர்வம் உண்டாகும். துணை மற்றும் இணையான பாடக் கல்விகளை கற்றுக் கொள்வீர்கள். தொழிற்சங்க பிரதிநிதிகளின் தொடர்பு.. உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். தொழில் செய்து வருபவருக்கு தொழில் சார்ந்த முயற்சிகள் நற்பலனைத் தரும். அதிரடியான காரியங்களில் திடீர் முடிவுகள் உண்டாகும். புத்திரருக்கு நல்ல வேலை கிடைக்கும். 
 
வெளிநாடு செல்லும் சூழ்நிலை சிலருக்கு உண்டாகும். உங்களின் திருமண தடை நீங்கும். நல்ல வரன் அமையும். புத்திர சந்தானம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சி குடும்பத்தில் ஏற்பட்டு மகிழ்ச்சியாக நடத்தி முடிப்பீர்கள். நில பரிவர்தனை மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். அரசியலில் செலவுகள் உண்டாகும். அதிக ஆர்வத்தை குறைத்து கொள்வது நல்லது. பணபுழக்கம் சீராக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
25-05-2024 சனிக்கிழமை பகல் 11.04 முதல் 27-05-2024 திங்கள் மாலை 04.22 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், ஓரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் காலை 06 - 07 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி அருகம்புல் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டியது விரைவில் நிறைவேறும்.